New Version Uploaded on 15th September 2017
www.appusami.com
About us Feed back Hekp Archives Send your Articles Contact us
    

 

ஈரோடு அக்கறையின்

மே மாத (2017) கூட்டம்

டாக்டர் டி.ஜி.ஆர்.

 
யாழி ரெஸிடென்ஸியில் நடந்த இந்த கூட்டத்தில் ஈரோடு ரோட்டரி வடக்கு சங்கமும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. நான் நீண்ட நாட்களாக திரு. K.P.N. அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த கூட்டத்தில் என் எண்ணம் நிறைவேறியது. அதே போல் தன் வாழ்க்கயே சமூகத்திற்கு அர்ப்பளித்த Dr.S.V. மகாதேகன் அவர்களுக்கு பாராட்டும் விதமாகவும் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.

பேபி மிருதுளா

வழக்கமாக இறை நேரத்தில் பங்கேற்கும் திரு. அருள் மணி திடீரென்று வராததால் பேபி மிருதுளா மிக அருமையாக இறை நேரத்தை தொடங்கி வைத்தார்.

ரோட்டரி சங்கத் தலைவர் திரு. A.S. ஐயர் அனைவரையும் வரவேற்று பேசினார். அக்கறை அமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்தை தெளிவு படுத்தினேன். பல நாட்களாக தடைபெற்று வந்த K.P. நடராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.

அத்துடன் Dr.S.V. மகாதேன் தன்னுடைய இதயம் நற்பணி மன்ற நண்பர்களுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

திரு. கொங்கு குழந்தைசாமி

திரு. செவாலியர் குழந்தைசாமி திரு. K.P. நடராஜன் அவர்களைப் பற்றி கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி கூறியதாவது.
 

திரு. கேபிஎன் அவர்களுக்கு பாராட்டு பத்திரம்
 

சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் திருமதி மேகலா, திருமதி ஸ்வேதா

 

திரு. K.P. நடராஜன் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். திருச்செங்கோடு அம்மா பாளையம் அவர்கள் பூர்விகம். அந்த ஊரின் வறட்சி காரணமாக சேலம் குடிபெயர்ந்தார்கள்.

அவருடைய தாத்தா குப்பண்ணக் கவுண்டர் தன்னுடைய நிலங்களை பிரித்தபோது, தன்னுடைய தகப்பனார் பொன்மலைக் கவுண்டருக்கு இரண்டு ஏக்கர் நிலதான் கிடைத்தது.

தன்னுடைய தந்தை நடராஜனை ஒரு போலீஸ் அதிகாரியாகத்தான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் திரு. நடராஜன் ஆசை எல்லாம் பஸ் ஓட்டுநர்கள் மீதும், பஸ் நிலையங்கள் மீதும்தான் குழந்தைகளுக்கே உண்டான இந்த ஆசை, பிற்காலத்தில் அதே மாதிரி வாழ்க்கையும் அமைந்துவிட்டது.

தன்னுடைய தமையனார் பஸ்ஸில் க்ளீனராக வேலை ஆரம்பித்த நடராஜனுக்கு தனியாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆஐச திரு. நடராஜனுக்கு நடிகர் சிவகுமார் மேல் ஒரு மானசீக ஆசை. அதன் காரணமாக, அவருடைய தமையனார் பஸ்ஸிற்கு சிவகுமார் ட்ரான்ஸ் போர்ட்ஸ் என்று பெயரும் வைத்தார்கள். சில வருடங்களிலேயே அதை விற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தன்னுடைய தாத்தாவிடம் நான் தனியாக பஸ் நடத்த வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வெறும் 4,000 ரூபாய் மட்டும்தான் கொடுத்தார். தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் மனைவியின் நகைகள் வைத்தும் மற்ம் சென்னையில் உள்ள பைனான்ஸியர் கௌதம் சேட் என்றவரிடமும் பணம் பெற்று ஒரு பஸ் வாங்கினார்.

திருச்சி சென்னை வழித்தடங்களில் வைகை எக்ஸ்பிரசிற்கு சவாலாக...

ஆரம்ப கால கட்டத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும், வைகை எக்ஸபிரஸ் நேரத்தைவிட முன்னரே வந்து சாதனை படைத்தார்.

மக்களின் தேவைக்கேற்ப லக்சரி பஸ்களு ஆரம்பித்து நல்ல பெயர் வாங்கினார். தற்போது தன்னிடம் 250 சொகுசு பஸ்கள் இருப்பதாலும் தன்னுடைய வெற்றியின் ரகசியம்.

முடியாது என்று எதுவும் இல்லை.

தெரியாத தொழிலில் ஈடுபட கூடாது.


நான் நன்றாக படித்திருந்தால் ஒரு வேலை இந்த நிறுவனத்தினை மேலும் நன்றாக கொண்டு சென்றிருக்கலாம் என்று சொல்பவர்

K.P.N. குப்பண்ண கவுண்டர், பொன்மலைக் கவுண்டர், நடராஜன்.

திரு. S.V. மகாதேவன் பற்றி சில தகவர்களை டாக்டர் டி.ஜி.ஆர். கூறியது.
 

திரு. எஸ்.வி. மகாதேவன் நன்றியுரை

 

திரு. கேபிஎன் நன்றியுரை


தன்னுடைய 58 வயதிற்குள் 35 வருடத்தை பொது மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்.

மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ முகாம்கள் நடத்தி கொண்டிருப்பவர். இதற்கு பெரிதும் உதவியர் டாக்டர் ரகுபதி ஆரம்பகால கட்டத்தில் நடிகர் கமலஹாசனுடன் சேர்ந்து கமலஹாசன் நற்பணி மன்றம் என்று தொடங்கியவர். பிற்காலத்தில் இதயம் நற்பணி மன்றம் என்று தொடர்ந்து செய்து வருகிறார். மறைந்த திரு. அப்துல் கலாம் இவரை அழைத்து பாராட்டியிருக்கிறார்.

திரு. வைகோ, திரு. கணேசமூர்த்தி போன்றோர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்.

ஒரு அமெரிக்க பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது, திரு. கே.பி.என். மற்றும் டாக்டர் எஸ்.வி. மகாதேவன் இருவருக்கும் அக்கறை அமைப்பு பாராட்டு இதழ் கொடுத்து கௌரவித்தது.

திரு. கார்த்திகேயன் செயலர் நன்றி உரை கூற கூட்டம் நிறைவு பெற்றது.