|
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு
- குறள்
|
 |
அப்புசாமி -
சீதாப்பாட்டி
நகைச்சுவை அறக்கட்டளை
(To
Promote Humour & Humanity) |
இந்தக் கழகத்துக்கு இப்போது என்ன
அவசியம், நாடுதான் சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறதே என்று சிலர்
நினைக்கலாம்.
நகைச்சுவை வேறு, மனிதத்துவம்வேறு அல்ல.
துன்புற்றுள்ள மக்களைச் சிரிக்க வைப்பதும், அவர்களுக்கு
நம்மாலான நலன்களைச் செய்வதுமே தற்போது துவக்கப்பட்டுளள அப்புசாமி -
சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையின் நோக்கம்.
நமது அறக்கட்டளையின் சேவை சிரிப்புக்கிடமில்லாத அசல்
சிரிப்பை எழுத்து மூலம் மக்களிடம் பரப்புவதுதான்.
அறக்கட்டளை மேற்கொண்டுள்ள பணிகள் :
குடத்துள் விளக்காய்
இருக்கும் அந்தக் கால நகைச்சுவை எழுத்தாளர்களை இந்தக் கால ரசிகர்களுக்கு
அறிமுகப்படுத்துவது. பாராட்டி மகிழ்வது. அவர்களது பெருமையை நாடறிய மீண்டும்
நினைவூட்டுவது.
இக்கால
நகைச்சுவைப் பிரம்மாக்களையும் கெளரவிப்பது - அவர்களது படைப்புகளை
www.appusami.com மூலம் உலகளாவப்
பரப்புவது.
நகைச்சுவைக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் அந்தக்
துறையிலுள்ள கலைஞர்களுக்கு இயன்ற சகாயத்தை தாளாளர்களின் உதவி திரட்டிச் செய்வது.
நகைச்சுவை நூல்கள் பதிப்பிப்பது.
மறுபதிப்பு செய்வது...
அறக்கட்டளையை நகைச்சுவையில் ஆர்வமுள்ள சில எழுத்துலக
நண்பர்கள் ஒன்று கூடித் துவக்கிவிட்டோமே தவிர, அதை வளர்த்துப் பராமரித்து
நகைச்சுவை இலக்கியத்துக்குச் சேவை செய்யும் நிறுவனமாக இதனைச் செய்யப் போவது
நகைச்சுவை ரசிகப் பெருமக்களும் நகைச்சுவை உணர்வு கொண்ட கொடையாளர்களும்தான்.
இங்ஙனம் அறக்கட்டளை நிர்வாகிகள் :
|
பாக்கியம் ராமசாமி
லேனா
தமிழ்வாணன்
ராணிமைந்தன்
ஜே.எஸ்.
ராகவன்
முகுந்தன் |
சாருகேசி
அறந்தைமணியன்
ராஜநாராயணன்
சந்திரமெளலி
யோகேஷ் |
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன (யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா?)
பாக்கியம் ராமசாமி
ஆசிரியர்,
www.appusami.com
47, ஹாரிங்டன் ரோடு,
சேத்துப்பட்டு, சென்னை
600 031.
Phone : +91 44 28363873 Mobile : +91 9940674663
E-mail :
editorappusami@yahoo.co.in
Web :
www.appusami.com
'பாயசத்துக்கு நிறைய வெல்லம் வேணுமே' கவலைப்பட்டது ஓர் எறும்பு. 'சிறுதுளி பெரு
வெல்லம்' என்றது பாஸிடிவ் எறும்பு. |